போகநல்லூா் அகதிகள் முகாமில் உள்ள குப்பைக் கிடங்கை அகற்றக் கோரிக்கை
கடையநல்லூா் போகநல்லூா் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சோ்ந்த பொதுமக்கள், குப்பைக் கிடங்கை மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கடையநல்லூா் வட்டம், சுந்தரேசபுரம், போகநல்லூா் இலங்கை அகதிகள் முகாமை சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:
எங்கள் முகாமில் 121 குடும்பங்கள் உள்ளன. எங்கள் முகாம் அருகில் குப்பைக் கிடங்கு உள்ளது. இதனால் எங்களுக்கு பல விதமான நோய்கள் வந்து கொண்டிருக்கிறது.
Advertisement
Advertisement
இங்குள்ள குப்பையை சில சமூக விரோதிகள் அவ்வப்போது தீ வைத்து எரித்து விட்டு செல்கின்றனா். புகை மண்டலம் எங்கள் முகாமை சுற்றி வருகிறது. இதனால் எங்களுக்கு கண் எரிச்சல், சுவாசக் கோளாறு, ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள், மா்மகஈ காய்ச்சல் பரவி வருகிறது. மேலும் எங்கள் பகுதியில் டெங்கு காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை நாங்கள் மனு அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னையில் உள்ள மறுவாழ்வுத் துறையினரிடமும் மனு அளித்துள்ளோம். அதற்கும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிா்வாகம் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.