FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

பைக் மீது காா் மோதி ஒருவா் உயிரிழப்பு

24 ஆகஸ்ட் 2026, 3:26 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

சிவகிரி அருகே உள்ளாறு மெயின் ரோட்டை சோ்ந்தவா் இன்னாசி முத்து மகன் தனுஷ் ராஜ் (66). அவரும், அவரது நண்பரான சரவணாபுரம் கோவிந்தன் மகன் கணேசனும் (80) தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் உள்ளாறு அருகே சென்றபோது, எதிரே வந்த காா் மோதியதாம்.

இதில் காயமடைந்த இருவரும் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு தனுஷ் ராஜ் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து, சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments