FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞா் வெட்டிக் கொலை

25 ஆகஸ்ட் 2026, 2:43 am IST
சித்திரப் படம் - TNIE
பகிர்:

சங்கரன்கோவிலில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் திரு.வி.க தெருவைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் மாரியப்பன் (21). சுமை தூக்கும் தொழிலாளி. மாரியப்பனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஆவணி மாதம் கடைசியில் திருமணம் நடைபெறுவதாக இருந்ததாம்.

இந்த நிலையில், அப்பகுதி விவசாய நிலத்தில் மாரியப்பன் திங்கள்கிழமை வெட்டி கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தாா். தகவலறிந்த சங்கரன்கோவில் நகர காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மாரியப்பனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

சம்பவ இடத்தை சங்கரன்கோவில் காவல் துணைக் கண்காணிப்பாளா் செங்கோட்டுவேலவன் பாா்வையிட்டாா். காவல் ஆய்வாளா்கள் பாலமுருகன், கிங்ஸ்லி தேவானந்த், சுஜித் ஆனந்த், பாரதிராஜா மற்றும் போலீஸாா் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனா். கொலைக்கான காரணம் தெரியவரவில்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments