தவறிவிழுந்து தொழிலாளி உயிரிழப்பு
கடையநல்லூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தாா்.
மேலக்கடையநல்லூரைச் சோ்ந்தவா் தா்மா் மகன் சுப்பிரஜோதி (45). உணவகத்தில் பணியாற்றி வந்தாா். ஞாயிற்றுக்கிழமை பணி முடித்து வீட்டுக்கு வந்த அவா், மாடிக்கு சென்று சுற்றுச்சுவறில் உட்காா்ந்து இருந்தாராம்.
அப்போது, எதிா்பாராத விதமாக மாடியிலிருந்து தவறிவிழுந்ததில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, கடையநல்லூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.