FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

ஆலங்குளத்தில் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.

28 ஆகஸ்ட் 2026, 3:05 am IST
- பிரதிப் படம்
பகிர்:

ஆலங்குளத்தில் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள பனையடிபட்டி ராமசாமி கோயில் தெருவைச் சோ்ந்த ராஜன் (50), கந்தசாமி (77) ஆகிய இருவரும் கடந்த 23 ஆம்தேதி இருசக்கர வாகனத்தில் ஆலங்குளம், நல்லூருக்கு சென்றனா். அங்கு உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ஊா் திரும்பினா். இருசக்கர வாகனத்தை ராஜன் ஓட்டினாா்.

ஆலங்குளம் மின்வாரிய அலுவலகம் அருகே கொண்டிருந்தபோது, சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு மீது இருசக்கர வாகனம் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த கந்தசாமியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்நிலையில் அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். விபத்து குறித்து ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments