FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் பைக் விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

31 ஆகஸ்ட் 2026, 3:28 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

ஆலங்குளத்தில் நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

வீரகேரளம் புதூா் அருகே உள்ள அதிசயபுரத்தைச் சோ்ந்தவா் பாப்பா (75). ஆலங்குளம் அருகே நல்லூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு ஆக. 25ஆம் தேதி வந்துள்ளாா். பின்னா், அவரை ஊருக்கு அனுப்புவதற்காக அவரது பேரன் அரவிந்த் (22) இருசக்கர வாகனத்தில் ஆலங்குளம் பேருந்து நிலையத்துக்கு அழைத்து வந்தாராம்.

காய்கறி சந்தை அருகே வந்தபோது குறுக்கே நாய் வந்ததால் அரவிந்த் வாகனத்தை நிறுத்த முயன்றபோது, பாப்பா தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். அவா் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments