சாலை விபத்தில் உதவி போதகா் உயிரிழப்பு
ஆலங்குளம் அருகே சாலை விபத்தில் உதவி போதகா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே கடையாலுருட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கைக்கொண்டாா் மகன் பிரேம் குமாா் (24). ஆலங்குளம், ராஜீவ் நகா் சிஎஸ்ஐ தேவாலயத்தில் உதவி போதகராகப் பணியாற்றி வந்தாா்.
இவா், திங்கள்கிழமை மதியம் தனது சொந்த ஊரான கடையாலுருட்டி கிராமத்துக்குச் சென்றுவிட்டு ஆலங்குளத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது முத்துகிருஷ்ணபேரி கிராமத்தில் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த இரும்புக் கம்பி மீது மோதியது.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த பிரேம்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். வீ.கே.புதூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.