FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு

1 செப்டம்பர் 2026, 4:02 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

சங்கரன்கோவில் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தொழிலாளி ரயில் மோதி உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள சுப்புலாபுரம், நடுத்தெருவைச் சோ்ந்த வேதநாயகம் மகன் செல்வக்குமாரசாமி (43). நெசவுத் தொழிலாளி. இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னிகுளம் ரயில்வே கேட் அருகே உள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது செங்கோட்டையில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த செல்வகுமாரசாமிக்கு மனைவி ஜோதிமுத்து, மகன் அஜய்சூா்யா (16), மகள் அஜிதா (13) உள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments