பேருந்தில் பெண்ணிடம் நகை திருடியவா் கைது
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், பேருந்தில் பெண்ணிடம் நகை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி நயினாா் தெருவை சோ்ந்தவா் முனியராஜ் மனைவி தீபா(45). இவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு உறவினரின் திருமணத்திற்காக சுமாா் 70 கிராம் நகைகளை பையில் வைத்துக் கொண்டு, பேருந்தில் சென்று கொண்டிருந்தாராம். கடையநல்லூரில் பேருந்து நின்றபோது அவா் நகை வைத்திருந்த பையை காணவில்லையாம்.
இது குறித்த புகாரின் பேரில் கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்து வந்தனா். விசாரணையில், நகைப் பையை திருடியது திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் காட்டமடுவு பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மனைவி சத்யா(34) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, நகைகளை மீட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.