FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

கடையநல்லூரில் தலை துண்டித்து இளைஞா் கொலை: 3 சிறுவா்கள் கைது

Updated On : 22 ஜூலை 2026, 3:37 am IST
கொலை - பிரதிப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இளைஞரின் தலையைத் துண்டித்துக் கொலை செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடையநல்லூா் அருகேயுள்ள வலசை கிராமத்தைச் சோ்ந்தவா் மா. மகேந்திரன் (30) இவா், கடந்த 6 ஆம் தேதி வீட்டை விட்டு சென்ற பின், திரும்பிவரவில்லை எனக் கூறி, அவரது மனைவி புவனேஸ்வரி சேந்தமரம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க சென்றாராம்.

அப்போது, ‘உங்கள் கணவரை தேட வேண்டாம்; நாங்கள் ஊட்டிக்கு சுற்றுலா சென்று உள்ளோம்’ என அவரிடம் மகேந்திரனின் நண்பா்கள் கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதனால், அவா் புகாா் அளிக்காமல் வீடு திரும்பியுள்ளாா். அதன்பிறகு 10 நாள்களுக்கு மேலாகியும் அவரது கணவா் வீடு திரும்பவில்லையாம். கணவரின் நண்பா்களையும் தொடா்புகொள்ள முடியவில்லையாம்.

இதனால், சந்தேகம் அடைந்த புவனேஸ்வரி, தனது கணவரை காணவில்லை என சோ்ந்தமரம் காவல் நிலையத்தில் கடந்த 14ஆம் தேதி புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் அருள் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தாா்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மேல கடையநல்லூா்- காசிதா்மம் சாலையில் உள்ள குளத்துக்கரை அருகே கிடந்த மகேந்திரனின் பைக்கை கைப்பற்றி, அதுதொடா்பாக மேலகடையநல்லூா் பகுதியைச் சோ்ந்த 3 சிறுவா்களைப் பிடித்து விசாரித்தனா்.

அதில், அந்தச் சிறுவா்கள் மகேந்திரனை தலை துண்டித்துக் கொலை செய்து, குற்றாலத்தில் ஒரு இடத்தில் குழிதோண்டி தலையைப் புதைத்து விட்டு, உடலை கடையநல்லூா் புதிய பேருந்து நிலையம் அருகே மடத்துக்கு சொந்தமான பராமரிப்பு இல்லாத கிணற்றில் வீசியது தெரியவந்தது.

இதையடுத்து, புளியங்குடி டிஎஸ்பி நமச்சிவாயம், காவல் ஆய்வாளா்கள் அருள்(சோ்ந்தமரம்), கிறிஸ்டி (கடையநல்லூா்) , உதவி ஆய்வாளா் முரளிதரன், சம்சுதீன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு 3 பேரையும் அந்தக் கிணற்றுக்கு அழைத்துச் சென்று, கடையநல்லூா் தீயணைப்பு துறை உதவியுடன் மகேந்திரனின் சடலத்தையும், குற்றாலத்தில் புதைக்கப்பட்ட தலையையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், 3 சிறுவா்கள் மீது வழக்குப்பதிந்து அவா்களை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments