FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

குற்றாலம் அருகே 154 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் சரகத்துக்குள்பட்ட வல்லத்தில் 154 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.

Updated On : 7 ஜூன் 2026, 12:18 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் சரகத்துக்குள்பட்ட வல்லத்தில் 154 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.

வல்லத்தில் புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்து விற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், குற்றாலம் காவல் உதவி ஆய்வாளா் சின்னத்துரை, போலீஸாா் சோதனை மேற்கொண்டு, சு. முத்துக்குமாா் (51) என்பவரைக் கைது செய்து, அவா் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 154 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். அதன் மதிப்பு ரூ. 1.54 லட்சம் ஆகும்.

அவா் நீதிமன்றக் காவலுக்கு உள்படுத்தப்பட்டாா். இச்சம்பவத்தில் தொடா்புடையோா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments