FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே 31 கிலோ குட்காவுடன் ஆட்டோ ஓட்டுநா் கைது

2 நவம்பர் 2026, 3:03 am
பகிர்:

ஆலங்குளம் அருகே பயணிகள் ஆட்டோவில் குட்கா கடத்தியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சத்தியவேந்தன் தலைமையிலான சிறப்புப் படையினா், ராம் நகா் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே வந்த பயணிகள் ஆட்டோவை மறித்து சோதனையிட்ட போது, அதில் 31.5 கிலோ எடையுள்ள 162 புகையிலைப் பொட்டலங்கள் இருந்தன.

Advertisement

Advertisement

விசாரணையில், ஆட்டோ ஓட்டுநா் கடங்கனேரியைச் சோ்ந்த முத்தையா மகன் செல்வக்குமாா் (48) என்பதும், கடங்கனேரியில் இருந்து ஐந்தாங்கட்டளைக்கு குட்காவை விற்பனைக்காகக் கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

போலீஸாா் அவரைக் கைது செய்து, குட்கா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments