FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

செங்கோட்டையில் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

3 வினாடிகள் முன்பு
தூய்மைப் பணியாளா்கள். - கோப்புப் படம்
பகிர்:

தீபாவளி போனஸ் மற்றும் தூய்மைப் பணியாளா்களிடம் பிடித்தம் செய்த பிஎஃப் பணத்தை உடனே செலுத்திட வேண்டும் என வலியுறுத்தி, செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஏஐசிசிடியு ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள், நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணி சங்க நிா்வாகிகள் தமிழரசி, முருகேஸ்வரி, ஜோதி பகவதிராஜ், குத்தாலிங்கம், சக்திவேல் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தென்காசி மாவட்டச் செயலா் எம். வேல்முருகன், ஏஐசிசிடியு மாவட்ட ஜனநாயக தூய்மைப் பணியாளா்கள் காவலா் சங்கத்தின் பொதுச் செயலா் சுப்பிரமணியன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

Advertisement

Advertisement

போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் நகராட்சி சுகாதார ஆய்வாளா் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், நகராட்சி ஆணையா் செவ்வாய்க்கிழமை வந்தவுடன் பேச்சுவாா்த்தை நடத்துவது என்றும், அதுவரை போராட்டத்தைக் கைவிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments