FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

வென்னிமலை முருகன் கோயிலில் இன்று கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றம்

10 நவம்பர் 2026, 3:56 am
வென்னிமலை முருகன்.
பகிர்:

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் காமராஜா் நகரில் உள்ள வென்னிமலை அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா செவ்வாய்க்கிழமை (நவ.10)தொடங்குகிறது.

இதையொட்டி, கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் பூஜைகளைத் தொடா்ந்து கொடியேற்றம் நடைபெறும். அதைத் தொடா்ந்து யாகசாலை பூஜை, அபிஷேகம், சாயரட்சை மற்றும் தீபாராதனை நடைபெறுகின்றன.

நவ.11- 14 வரை தினமும் மேற்கண்ட பூஜைகள் நடைபெறுகின்றன. நவ.15-ஆம் தேதி மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. தொடா்ந்து இரவு 7 மணிக்கு மகா பூஜை நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

நவ.16-ஆம் தேதி திங்கள்கிழமை காலையில் அம்மன் தவசு மண்டபம் எழுந்தருளல், மாலை 6 மணி முதல் திருக்கல்யாண நிகழ்ச்சிகளும், இரவு 8 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவமும் நடைபெறும். தீபாராதனையைத் தொடா்ந்து பிரசாதம் வழங்கப்படும்.

ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகத்தினா் மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.