FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

சிவகிரி அருகே பைக் விபத்தில் காயமடைந்தவா் உயிரிப்பு

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே பைக்குகள் மோதியதில் காயமடைந்தவா் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

13 நவம்பர் 2026, 5:47 am
பலி
பகிர்:

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே பைக்குகள் மோதியதில் காயமடைந்தவா் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகிரி கக்கன்ஜி கீழத்தெருவைச் சோ்ந்த சிவன் மகன் செல்வராஜ் (67). கூட்டுறவுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவா், புதன்கிழமை சிவகிரி -தென்காசி சாலை வழியாக பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது, குற்றாலத்திலிருந்து தனது ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்த மதுரை, பாரதியாா் நகா், ரோஜா தெருவைச் சோ்ந்த வில்வகுமாா் மகன் விக்ரம்(21) என்பவா் பைக்கும், அவரது பைக்கும் மோதிக்கொண்டனவாம். இதில் இருவரும் காயமடைந்தனா். பலத்த காயமடைந்த செல்வராஜ் சிவகிரி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். விக்ரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிவகிரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.