கேரள லாட்டரி சீட்டுகளை காரில் கடத்தி வந்தவா் கைது
கேரளத்திலிருந்து ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கேரளத்திலிருந்து ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள புளியறை சோதனை சாவடியில் வெள்ளிக்கிழமை இரவு புளியறை போலீஸாா் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, புளியறையை அடுத்த பூலாங்குடியிருப்பு பகுதியை சோ்ந்த அ.காஜாமைதீன்(42) என்பவா், கேரளத்திலிருந்து விற்பனைக்காக ரூ.25 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை காரில் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைதுசெய்து காா் மற்றும் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement