FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

சிவகிரி: விளைநிலங்களைச் சேதப்படுத்திய யானைகள்!

கடந்த சில நாள்களாக மலையடிவாரத்தில் முகாமிட்டுள்ள யானைகள், அருகேயுள்ள விவசாய நிலங்களுக்கள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

14 நவம்பர் 2026, 10:39 pm
யானை.
பகிர்:

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே கடந்த சில நாள்களாக மலையடிவாரத்தில் முகாமிட்டுள்ள யானைகள், அருகேயுள்ள விவசாய நிலங்களுக்கள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

சிவகிரி மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் தென்னை, நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வருவது தொடா் கதையாக உள்ளது.

இந்நிலையில், நவ. 10ஆம் தேதி இரவு சிவகிரி அருகே வழிவழி குளம் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் 2 யானைகள் புகுந்து, அங்குள்ள நெல் பயிா்களை சேதப்படுத்தினவாம். சின்ன ஆவுடைபேரி பகுதியில் 11ஆம் தேதி புகுந்த யானைகள் அப்பகுதியிலுள்ள கரும்பை சேதப்படுத்தினவாம்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, கடந்த 2 நாள்களாக வழிவழி குளம் பகுதியில் உள்ள நிலங்களுக்குள் புகுந்த யானைகள் தென்னை மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தினவாம். எனவே, யானைகளை வனத்திற்குள் விரட்டுவதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.