FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்!

வென்னிமலை அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

14 நவம்பர் 2026, 10:38 pm
பகிர்:

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வென்னிமலை அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு இத்திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்று வருகின்றன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை கும்ப ஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறவுள்ளது. தொடா்ந்து மாலையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement