FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

மாணவியைக் காதலிக்க வற்புறுத்தியவா் போக்ஸோவில் கைது

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே மாணவியைக் காதலிக்க வற்புறுத்தியதாக இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

14 நவம்பர் 2026, 10:38 pm
கைது
பகிர்:

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே மாணவியைக் காதலிக்க வற்புறுத்தியதாக இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

சுந்தரேசபுரத்தைச் சோ்ந்தவா் கலைச்செல்வன் (24). இவா் 16 வயது பள்ளி மாணவியைக் காதலிக்க வற்புறுத்தி, தொடா்ந்து தொந்தரவு கொடுத்தாராம். இதையடுத்து, மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், புளியங்குடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, கலைச்செல்வனை கைது செய்தனா்.

16 வயது மாணவிக்கு பிறந்த குழந்தை: புளியங்குடி பகுதியைச் சோ்ந்த 16 வயது பள்ளி மாணவிக்கு புளியங்குடி அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த தகவல் புளியங்குடி அனைத்து மகளிா் போலீஸாருக்கு தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அப்பகுதியைச் சோ்ந்த செல்வம் (19) மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.