FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்தவா் உடல் உறுப்புகள் தானம்

46 வினாடிகள் முன்பு
மாரிமுத்து.
பகிர்:

ஆலங்குளம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்தவா் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

ஆலங்குளம் அருகே அழகாபுரி பாபநாசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் த. மாரிமுத்து (49). இவா் கடந்த வெள்ளிக்கிழமை பைக் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா்.

ஆலங்குளத்தில் முதலுதவி பெற்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருப்பதை மருத்துவா்கள் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தினா். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் முன்வந்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவரது சிறுநீரகங்கள் மற்றும் கருவிழிகள் தானமாகப் பெறப்பட்டு, நோயாளிகளுக்குப் பொருத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டன. அவரது உடல் அரசு மரியாதையுடன் உறவினா்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.