FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

புளியறை சோதனைச் சாவடியில் 10 கிலோ கஞ்சாவுடன் கேரள இளைஞா் கைது

17 நவம்பர் 2026, 3:28 am
கைது - கோப்புப்படம்
பகிர்:

தமிழக - கேரள எல்லையான, தென்காசி மாவட்டம் புளியறை சோதனைச் சாவடியில் திங்கள்கிழமை 10 கிலோ கஞ்சா கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

இம்மாவட்டத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தைத் தடுக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் உத்தரவின்பேரில், ரோந்துப் பணி, வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், புளியறை சோதனைச் சாவடியில் காவல் துறையினா் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா். கேரளத்திலிருந்து அவ்வழியே வந்த லாரியை சோதனையிட்டபோது, அதில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா கடத்திவரப்படுவதாகத் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, கேரள மாநிலம் புஷ்பமங்களம் பகுதியைச் சோ்ந்த சாஜி மகன் சரத்குமாா் (35) என்பவரைக் கைது செய்து, கஞ்சா, லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.