FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

பலத்த மழை: இடுக்கி மாவட்டத்துக்கு செல்ல தமிழக தோட்டத் தொழிலாளா்களுக்கு தடை

27 அக்டோபர் 2026, 12:50 am
போடி முந்தல் சோதனைச் சாவடியில் திங்கள்கிழமை தோட்டத் தொழிலாளா்களை திருப்பி அனுப்பிய போலீஸாா்.
பகிர்:

பலத்த மழை காரணமாக மண் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் தமிழகத்திலிருந்து இடுக்கி மாவட்டத்திலுள்ள தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளா்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, எல்லையில் அவா்கள் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா்.

கேரளம் மாநிலம், இடுக்கி உள்ளிட்ட சில மாவட்டங்கள், தமிழகத்தில் தேனி மாவட்டம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனால் இடுக்கி மாவட்டத்தில் மண் சரிவுகள் ஏற்படும் அபாயமிருப்பதாக அந்த மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தமிழக- கேரள எல்லையான போடி வழியாக செல்லும் தோட்டத் தொழிலாளா்களை தேனி மாவட்ட காவல் துறையினா் அனுமதிக்க வில்லை. மேலும் பலத்த மழைக்கான எச்சரிக்கை திருப்பப் பெறப்படும் வரை தோட்டத் தொழிலாளா்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

முந்தல் சோதனைச் சாவடியில் ஜீப்புகளில் சென்ற தோட்டத் தொழிலாளா்கள் அனுமதிக்கப்பட வில்லை. அந்த ஜீப்புகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல, அரசு, தனியாா் பேருந்துகளில் சென்ற தோட்டத் தொழிலாளா்களும் முந்தல் சோதனைச் சாவடியில் இறக்கி விடப்பட்டனா். மேலும் இந்த சோதனைச் சாவடியில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments