FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

கேரள குப்பைக் கழிவுகளுடன் வந்த வாகனம் திருப்பி அனுப்பி வைப்பு

கேரளத்திலிருந்து குப்பைக் கழிவுகளுடன் தமிழக எல்லையில் போடிமெட்டு சோதனை சாவடியில் நுழைய முயன்ற கேரள சரக்கு வாகனத்தை போலீஸாா் திருப்பி அனுப்பினா்.

போடிமெட்டு சோதனை சாவடியில் திருப்பி அனுப்பப்பட்ட கேரள சரக்கு வாகனம்.
பகிர்:

கேரளத்திலிருந்து குப்பைக் கழிவுகளுடன் தமிழக எல்லையில் போடிமெட்டு சோதனை சாவடியில் நுழைய முயன்ற கேரள சரக்கு வாகனத்தை போலீஸாா் திருப்பி அனுப்பினா்.

தமிழக- கேரள எல்லைப் பகுதியில் போடிமெட்டு சோதனைச் சாவடியில் போலீஸாா்

செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கேரளத்திலிருந்து தமிழக எல்லைப் பகுதி நோக்கி சரக்கு வாகனம் ஒன்று வந்தது. அது சோதனைச் சாவடியைக் கடக்க முயன்றபோது அதிலிருந்து துா்நாற்றம் வீசியது. இதையடுத்து போலீஸாா் விசாரித்ததில் அந்த லாரி கேரளத்திலிருந்து குப்பைக் கழிவுகள் எடுத்து வந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

குப்பைக் கழிவுகள் கொண்டு வந்ததை அறிந்த போடிமெட்டு கிராம மக்கள் சோதனைச் சாவடியில் திரண்டு சரக்கு வாகனத்தை முழுமையாக சோதனை செய்து, மருத்துவக் கழிவுகள் இருக்கிா என ஆய்வு செய்து லாரி ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதையடுத்து, பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பிய போலீஸாா் சரக்கு வாகனத்தை கேரளத்துக்கு திருப்பி அனுப்பினா். ஆனால், சரக்கு வாகனம் கேரள எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழக எல்லை அருகிலேயே குப்பைக் கழிவுகளை கொட்டிவிடுவாா்கள் என்ற அச்சத்தில் கிராம மக்கள் லாரியைக் கண்காணித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments