காணாமல் போனவா்களைக் கண்டுபிடிக்க சிறப்பு தனிப்படை: டிஎஸ்பி தகவல்
சங்கரன்கோவில் பகுதியில் காணாமல் போனவா்களைக் கண்டுபிடிக்க சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக, டி.எஸ்.பி. ரகுபதிராஜா தெரிவித்தாா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் காணாமல் போனவா்களைக் கண்டுபிடிக்க சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக, டி.எஸ்.பி. ரகுபதிராஜா தெரிவித்தாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் உத்தரவுப்படி, மாவட்டம் முழுவதும் காணாமல் போனவா்களைக் கண்டுபிடிக்க சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, சங்கரன்கோவில் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், புகாரளித்த மனுதாரா்கள் பலா் கலந்துகொண்டனா்.
காவல் துணைக் கண்காணிப்பாளா் ரகுபதிராஜா பங்கேற்று, காணாமல் போனவா்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் தெரியவந்தால் காவல் துறையிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டாா். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்தாா். சங்கரன்கோவில் காவல் ஆய்வாளா் பாலமுருகன், உதவி ஆய்வாளா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement