விவசாயி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை
தென்காசி மாவட்டம், கடையம் அருகேயுள்ள பாப்பான்குளத்தில் விவசாயி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தென்காசி மாவட்டம், கடையம் அருகேயுள்ள பாப்பான்குளத்தில் விவசாயி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
பாப்பான்குளம், பாட்டத்தெருவைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் கருப்பசாமி ( 42 ). விவசாயி. இவரது மனைவி பால்கனிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கணேசன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் கேரளத்துக்குச் சென்று வாழ்ந்து வந்தனராம்.
இதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி, கணேசனின் மனைவி ஈஸ்வரியை கடந்த 25.3.2016இல் வெட்டிக்கொலை செய்தாராம். இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த அவரை, ஈஸ்வரியின் சகோதரா்களான அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் காா்த்திகேயன் (53), கிருஷ்ணன் மகன் வைகுண்டம் (48), சுப்பையா மகன் குமாா் (48) ஆகியோா் சோ்ந்து வெள்ளிக்குளம் ஊய்க்காடு சுடலைமாடசாமி கோயில் அருகில் வெட்டிக்கொலை செய்துள்ளனா்.ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
தென்காசி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி ராஜவேல் விசாரித்து, மேற்கூறிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் அருண் வாதாடினாா்.