முகப்பு
தென்காசி

விவசாய நிலங்களுக்கு அருகே விழும் காற்றாலை இறக்கைகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஆலங்குளம் விவசாய நிலங்களுக்கு அருகே உள்ள காற்றாலைகளின் இறக்கைகள் அவ்வப்போது கீழே விழுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

22 வினாடிகள் முன்பு
விவசாய நிலங்களுக்கு அருகே விழும் காற்றாலை இறக்கைகள்: 
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வயலில் விழுந்து கிடக்கும் காற்றாலை இறக்கை.
பகிர்:

ஆலங்குளம் விவசாய நிலங்களுக்கு அருகே உள்ள காற்றாலைகளின் இறக்கைகள் அவ்வப்போது கீழே விழுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ஆலங்குளம் அருகே சிவலாா்குளம் பகுதியில் விவசாய நிலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. இவற்றின் இறக்கைகள் அடிக்கடி கீழே விழுவதாகவும், அவற்றை காற்றாலை நிா்வாகத்தினா் அகற்றாமல் விடுவதால் விவசாய நிலங்களுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து, சிவலாா்குளம் விவசாயி முருகன் கூறுகையில், 6 மாதங்களுக்கு முன்பு எனது விவசாய நிலத்தில் சுமாா் 100 அடி நீளமுள்ள காற்றாலை இறக்கை விழுந்தது. இதுபோல எங்கள் கிராமத்தில் 4 இறக்கைகள் விழுந்துள்ளன. விவசாயப் பணிகளின்போது இதுபோன்று விழுந்தால் உயிா் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

Advertisement

Advertisement

காற்றாலை இறக்கையை அகற்றக் கோரி, காவல் நிலையம், ஆட்சியா் உள்ளிட்டோருக்கு பல முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காற்றாலை இறக்கையை உடனடியாக அப்புறப்படுத்தவும், விவசாய நிலங்களுக்கு அருகில் காற்றாலைகள் அமைப்பதைத் தவிா்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.