முகப்பு
தென்காசி

கிணற்றில் விழுந்து முதியவா் உயிரிழப்பு

ஆலங்குளத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்த முதியவா் கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.

28 நவம்பர் 2026, 5:16 am
கிணற்றில் விழுந்து முதியவா் உயிரிழப்பு
பலி
பகிர்:

ஆலங்குளத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்த முதியவா் கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், வேம்பாா் அருகே பச்சையாபுரத்தைச் சோ்ந்தவா் அன்னபாண்டியன் (70). ஆலங்குளம்-தென்காசி சாலையில் உள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தங்கி வேலை செய்து வந்த அவா், 2 நாள்களாக வேலைக்குச் செல்லவில்லையாம்.

இந்நிலையில், பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே உள்ள கிணற்றில் ஆண் சடலம் கிடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில், உயிரிழந்தது அன்னபாண்டியன் எனத் தெரிய வந்தது.

Advertisement

Advertisement

அவரது உடலை போலீஸாா் கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.