சிறுபான்மையினருக்கு பயனளிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தும்! - அமைச்சா் ஷாஜகான்
சிறுபான்மை மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில், பயனளிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தும் என்றாா் தமிழக சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஷாஜகான்.
தென்காசியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:
மதம் மாறிய சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வந்த 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை உயா் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ரத்து செய்துள்ள நிலையில், அதை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தேவைப்பட்டால் இதற்கான சட்ட வடிவத்தை பேரவையில் கொண்டு வருவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளேன்.
சிறுபான்மை மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில், கண்துடைப்பு அறிவிப்புகளாக இல்லாமல் பயனளிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தும் என்றாா் அவா்.
பேட்டியின்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் அப்துல் அஜீஸ், மாவட்டச் செயலா் செய்யது பட்டாணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.