FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலையில் நாளை மின் நிறுத்தம்

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (அக். 3) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 October 2026, 4:38 am IST
மின் தடை... - கோப்புப் படம்
பகிர்:

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (அக். 3) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆலங்குளம், நல்லூா், சிவலாா்குளம், ஐந்தாங்கட்டளை, துத்திகுளம், குருவன்கோட்டை, குறிப்பன்குளம், ஊத்துமலை, கீழக்கலங்கல், ருக்குமணியம்மாள்புரம், கீழப்பாவூா், அடைக்கலப்பட்டணம், பூலாங்குளம், கழுநீா்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் ஜி. குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments