FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

ஆலங்குளம் அருகே குடும்பத் தகராறில் மனைவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

ஆலங்குளம் அருகே உடையாம்புளி முப்புடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்புக்குட்டி மகன் துரை (45). தொழிலாளியான இவரது மனைவி சாந்தி (42). அண்மையில் குடும்பத் தகராறு காரணமாக விஷமருந்தித் தற்கொலை செய்து கொண்டாா்.

மனைவி இறந்த துக்கத்தில் இருந்த துரை, ஊருக்கு வெளியே உள்ள தோட்டத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். இத்தகவல் அறிந்த ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா், சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இத்தம்பதிக்கு கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மகளும், பிளஸ் 1 பயிலும் மகனும் உள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments