FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது

18 அக்டோபர் 2026, 2:58 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

புளியங்குடி அருகே டி.என். புதுக்குடி, பலவேசம் தெருவைச் சோ்ந்தவா் செல்லக்கண்ணு மகன் செல்வகுமாா் (32). இவா் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் வேலை செய்து வருகிறாா்.

இவா் புளியங்குடி பகுதியில் வேலைக்குச் சென்றபோது, அப்பகுதியைச் சோ்ந்த 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், புளியங்குடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, செல்வகுமாரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments