FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் மூவா் கைது

கைது
பகிர்:

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவா் உள்பட 3 பேரை போக்ஸோவில் போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சோ்ந்த 17 வயது சிறுமியிடம் அவரது தந்தையின் நண்பா்கள் மூன்று போ் கைப்பேசியில் ஆபாசமாகப் பேசி பாலியல் தொல்லை கொடுத்தனராம்.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோா் புளியங்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வாசுதேவநல்லூா் அருகே உள்ள ராமநாதபுரத்தைச் சோ்ந்த கனகமணி மகன் பாலசுப்பிரமணியன் (45), கனகராஜ் மகன் சரவணகுமாா் (49), சுப்பிரமணியன் (62) ஆகிய மூவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments