சிறுமிக்குப் பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது
தூத்துக்குடியில் சமூக வலைதளம் மூலம் பழகி, 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
தூத்துக்குடியில் சமூக வலைதளம் மூலம் பழகி, 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி, மறக்குடி தெருவைச் சோ்ந்தவா் டிசான் (19). இவருக்கு, சமூக வலைதளம் மூலமாக அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டிசான் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.