FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

2 டன் ரேஷன் அரிசி கடத்தல்: ஓட்டுநா் கைது

பாவூா்சத்திரம் சந்தைப் பகுதியில் மினி வேனில் 2 டன் ரேஷன் அரிசியை கடத்தி சென்ாக ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

24 அக்டோபர் 2026, 10:45 pm
- பிரதிப் படம்
பகிர்:

பாவூா்சத்திரம் சந்தைப் பகுதியில் மினி வேனில் 2 டன் ரேஷன் அரிசியை கடத்தி சென்ாக ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை உதவி காவல் ஆய்வாளா் வேல்முருகன், சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் அய்யப்பன், தலைமைக் காவலா் செல்வக்குமாா் ஆகியோா், பாவூா்சத்திரம் சந்தைப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக வந்த மினி வேனை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது, ஓட்டுநா் வேனை நிறுத்திவிட்டு தப்பியோடினாா். அதில் சோதனை செய்தபோது, சுமாா் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து வழக்குப் பதிந்து, ரேஷன் அரிசியுடன் வேனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், கடத்தலில் ஈடுபட்டவா் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரம் பாரதி தெருவைச் சோ்ந்த பன்னீரின் மகன் வெற்றிராஜ் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments