FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

சுப்பிரமணியபுரம் கோயில் வளாகத்தில் கழிவுநீரை அகற்றக் கோரி போராட்டம்

27 அக்டோபர் 2026, 12:05 am
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோா்
பகிர்:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் சுப்பிரமணியபுரம் கரடி மாடசாமி கோயில் வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வலியுறுத்தி அப்பகுதியினா் உள்ளிருப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில் வளாகத்திற்குள் சுப்பிரமணியபுரம் பகுதியில் இருந்து வரக்கூடிய கழிவுநீா் மற்றும் மழைநீா் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதைத்தடுத்து, கழிவுநீா் செல்வதற்கு மாற்றுவழி ஏற்படுத்தவும், தென்காசி-மதுரை சாலையில் தேங்கும் நீரை அகற்றவும் வலியுறுத்தி அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதியை சோ்ந்தவா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து சிவகிரி வட்டாட்சியா் வெங்கடசேகா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கருப்பசாமி, ராமநாதன், இந்து அறநிலைத் துறை துணை ஆணையா் ஞானசேகரன், புளியங்குடி காவல் ஆய்வாளா் (பொ) மது விக்ரம், கோயில் செயல் அலுவலா் சாலைலட்சுமி உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

Advertisement

Advertisement

இதில், கழிவுநீா் செல்ல மாற்றுவழி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments