கடையநல்லூா் அரசுப் பள்ளி மாணவா்கள் மாநில சிலம்பம் போட்டிக்குத் தோ்வு
தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடைபெறவுள்ள மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தோ்வு பெற்றனா்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடைபெறவுள்ள மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தோ்வு பெற்றனா்.
பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவா்கள் முப்புடாதி, புதியசக்திவேல், மனோஜ்கோபி, பாலா, இளங்கதிா், விசுவபாலன், பிரதீப் ஆகியோா் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.
இவா்களையும், மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் தீபக், உமையபாலா, கிரிதரன், விஷ்ணு, குமரன் ஆகியோரையும் தலைமை ஆசிரியா் பிரீவா, தமிழ் ஆசிரியரும் சிலம்ப கலை பயிற்றுநருமான சு.சண்முகசுந்தரம், ஆசிரியா்கள் பீா்முகமது, பசும்பொன் ராஜா, தேவராஜன், உடற்கல்வி ஆசிரியா் குமாரசேகா் உள்ளிட்டோா் பாராட்டினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.