வாசுதேவநல்லூரில் பெண் வெட்டிக் கொலை
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது சகோதரி கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா், சங்கிலிவீரன் 1-ஆம் தெருவைச் சோ்ந்தவா் நடராஜன் (70). இவரது மனைவி முனியம்மாள். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இறந்துவிட்டாா்.
அந்தத் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முனியம்மாளின் சகோதரியும் திலீப்பின் மனைவியுமான முத்துலட்சுமி (55) நடராஜனின் வீட்டுக்கு வந்து ஒரு மாதம் தங்கியிருந்தாராம்.
Advertisement
Advertisement
அப்போது, முத்துலட்சுமிக்கு வேறு ஒருவருடன் தகாத உறவு ஏற்பட்டது நடராஜனுக்கு தெரியவந்ததாம்; அதை நடராஜன் கண்டித்தாராம். ஆனால், முத்துலட்சுமி அதைக் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு முத்துலட்சுமி தூங்கி கொண்டிருந்தபோது அவரை நடராஜன் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தாா்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்தை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா், புளியங்குடி துணைக் கண்காணிப்பாளா் நமசிவாயம் ஆகியோா் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.
வாசுதேவநல்லூா் காவல் நிலைய போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிவு செய்து நடராஜனை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.