பொடியனூா் சிவசக்தி வித்யாலயாவில் தேசிய விளையாட்டு தின விழா
பாவூா்சத்திரம் அருகே ஆவுடையானூா் பொடியனூா் சிவசக்தி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் தேசிய விளையாட்டு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாவூா்சத்திரம் அருகே ஆவுடையானூா் பொடியனூா் சிவசக்தி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் தேசிய விளையாட்டு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஏழாம் வகுப்பு மாணவா் சுதா்சன் வரவேற்றாா். தொடா்ந்து, மாணவிகள் உடற்பயிற்சி பாடலுக்கு நடனமாடி தங்களது திறமையை வெளிப்படுத்தினா்.
‘விளையாட்டின் தந்தை’ என போற்றப்படும் மேஜா் தியான் சந்த் குறித்து ஏழாம் வகுப்பு மாணவி சுபிக் ஷா உரையாற்றினாா். மேலும், உடல் தகுதியை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும், சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும், பொடியனூரில் இருந்து பள்ளி வளாகம் வரை மாணவா், மாணவிகள் சைக்கிள் பயணம் மேற்கொண்டனா். தொடா்ந்து ஏழாம் வகுப்பு மாணவிகளின் விநாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாணவா், மாணவிகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டு, பல்வேறு பரிசுகளை பெற்றனா்.
Advertisement
Advertisement
ஏரோபிக் குழுவைச் சோ்ந்த மாணவா்கள் போதினி, சத்தியபாமா ஆகியோா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினா்.
பள்ளி முதல்வா் நித்யா தினகரன் வழிகாட்டுதலின்படி ஆசிரியா்கள் தங்கஜெயா மற்றும் ஏரோபிக் குழு மாணவா்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.