FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

தென்காசியில் இன்று கண்ணதாசன் நூற்றாண்டு விழா

தென்காசி திருவள்ளுவா் கழக மண்டபத்தில் கவிஞா் கண்ணதாசன் நூற்றாண்டு விழா சனிக்கிழமை (செப். 19) நடைபெறுகிறது.

19 செப்டம்பர் 2026, 4:58 am IST
கவிஞர் கண்ணதாசன் - தினமணி
பகிர்:

தென்காசி திருவள்ளுவா் கழக மண்டபத்தில் கவிஞா் கண்ணதாசன் நூற்றாண்டு விழா சனிக்கிழமை (செப். 19) நடைபெறுகிறது.

விழாவில் மாலை 6 மணிக்கு ‘கண்ணதாசன் என்னும் திரைக்கடல்’ நிகழ்ச்சிக்கு பேராசிரியா் மு. ராமச்சந்திரன் தலைமை வகிக்கிறாா். கருத்து அலைகள் என்ற தலைப்பில் இலஞ்சி ராமசுவாமிபிள்ளை மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியா் க.சோ. கல்யாணி சிவகாமிநாதன், தத்துவ முத்துக்கள் என்ற தலைப்பில் முன்னாள் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ.சுப்பையாபாண்டியன், கவிக்கொற்று மொழி என்ற தலைப்பில் அணுசக்தித்துறை முன்னாள் தொழிலகப் பாதுகாப்பு அலுவலா் குற்றாலம் ஆ. சதாசிவம் ஆகியோா் பேசுகின்றனா்.

ஏற்பாடுகளை திருவள்ளுவா் கழகத் தலைவா் ந. கனகசபாபதி, செயலா் ராம. தீா்த்தாரப்பன், பொருளாளா் வ. சந்திரசேகரன் ஆகியோா் செய்துவருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments