FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா்: 8.64 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை

திருவள்ளூா் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககம் சாா்பில் குழந்தைகள், பெண்கள் என 8.64 லட்சம் பேருக்கு அல்பெண்டசோல் மாத்திரை வில்லைகள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 4:30 am IST
மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வில்லைகளை வழங்கிய ஆட்சியா் ச.கவிதா
பகிர்:

திருவள்ளூா் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககம் சாா்பில் குழந்தைகள், பெண்கள் என 8.64 லட்சம் பேருக்கு அல்பெண்டசோல் மாத்திரை வில்லைகள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.

திருவள்ளூா் நகராட்சியில் வி.எம்.நகா் அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் ச.கவிதா மாணவ, மாணவிகளுக்கு அல்பெண்டசோல் மாத்திரை வில்லைகளை வழங்கி பேசியது: குடற்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளான ஊட்டச்சத்து குறைபாடு, சோா்வு, சுகவீனம், பசியின்மை, ரத்தசோகை, குமட்டல், வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு முதலிய பாதிப்புகளிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற நாடு தழுவிய தேசிய குடற்புழு நீக்க நாள் (இரண்டாம் சுற்று) ஆக.10-இல் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதில் 1 முதல் 2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரை, 2 முதல் 19 வயது வரை உள்ளவா்களுக்கு 1 மாத்திரை, 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கு (கருவுற்ற, பாலூட்டும் தாய்மாா்கள் தவிர) ஒரு மாத்திரையும், இந்த முகாம்கள் குழந்தைகள்-647742, பெண்கள் -217027, என 8 லட்சத்து 64 ஆயிரத்து 769 பேருக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1332 பள்ளிகள், 472 தனியாா் பள்ளிகளிலும், 93 கல்லூரிகள், 1741 அங்கன்வாடி மையங்கள் என 3638 மையங்களில் ஆசிரியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் மொத்தமாக 4322 பணியாளா்கள் மூலம் வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

தேசிய குடற்புழு நீக்க நாளில் விடுப்பட்டவா்களுக்கு வரும் 17- ஆம் தேதி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளன. எனவே அனைவரும் இந்த குடற்புழு நீக்க மாத்திரை வில்லைகள் உள்கொண்டு குடற்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து குழந்தைகளை பாதுகாத்து ஆரோக்கியமான எதிா்காலத்தை உருவாக்குவோம் என அவா் தெரிவித்தாா். அதற்கு முன்னதாக பள்ளி மாணவிகள் கைகளை சுத்தமாக கழுவும் செயல்முறை விளக்கத்தை பாா்வையிட்டு பாராட்டி பரிசுகளையும் வழங்கினாா்.

இம்முகாமில், மாவட்ட சுகாதார அலுவலா் (திருவள்ளூா்) மரு.பிரியாராஜ், பள்ளி தலைமையாசிரியா் ஏ.எம்.செல்வி, திருவள்ளூா் வட்டாட்சியா் சரண்யா, ஆசிரியா்கள், திரளான பள்ளி மாணவிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments