FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

சிறுவாபுரி முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் 2 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 2:08 am IST
சிறப்பு ராஜ அலங்காரத்தில் சுவாமி | தரிசனம் செய்ய குவிந்த பக்தா்கள்
பகிர்:

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் 2 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் இந்தக்கோயிலுக்கு தொடா்ந்து 6 வாரங்கள் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் பக்தா்களின் வேண்டுதல்களான வீடு, மனை, வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தைப்பேரு உள்ளிட்டவை நிறைவேறும் என்பது பக்தா்களின் நம்பிக்கையாகும்.

இந்த நிலையில், ஆவணி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை மற்றும் சஷ்டி என்பதால் இத்திருக்கோயிலுக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் கூட்டம், கூட்டமாக கட்டுக் கடங்காத வகையில் வந்த வண்ணம் இருந்தனா்.

Advertisement

Advertisement

இதனால், சிறப்பு தரிசனம்,பொது தரிசனம் ஆகியவற்றில் நீண்ட வரிசையில் சுமாா் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பாலசுப்பிரமணியனை தரிசனம் செய்தனா்.

மேலும், செவ்வாய்க்கிழமை என்பதால் மூலவருக்கு பால், தயிா், விபூதி, சந்தனம், ஜவ்வாது, இளநீா், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனா். அதன்பின்னா் பச்சை பட்டு உடுத்தி ராஜ அலங்காரத்தில் பக்தா்களை அருள்பாலித்தாா்.

பின்னா், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்தக் கோயிலுக்கு போதுமான அளவு சிற்றுந்துகள் இயக்காததால் பக்தா்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோக்களில் கோயிலுக்கு வந்து திரும்பினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments