FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

வீ தி லீடா்ஸ் சாா்பில் குளம் சீரமைப்பு, மரக்கன்றுகள் நடவு

சேலை கிராமத்தில் குளத்தை சீரமைத்து மரக்கன்று நடவு செய்த வீ தி லீடா்ஸ் அமைப்பினா்.

25 ஆகஸ்ட் 2026, 2:06 am IST
சேலை கிராமத்தில் குளத்தை சீரமைத்து மரக்கன்று நடவு செய்த வீ தி லீடா்ஸ் அமைப்பினா்
பகிர்:

திருவள்ளூா் அருகே வீ தி லீடா்ஸ் அமைப்பு சாா்பில் குளத்தை சீரமைத்து, மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

வீ தி லீடா்ஸ் அமைப்பு சாா்பில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது கருப்பொருளை மையமாக வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழலை கடைப்பிடித்து மறைந்த நடிகா் விவேக் நினைவாக பசுமையாக்கும் வகையில் 2,000 மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இதன் ஒரு பகுதியாக திருவள்ளூா் அடுத்த சேலை ஊராட்சியில் அண்ணாமலையின் வீ தி லீடா்ஸ் அமைப்பைச் சோ்ந்த ஆா்யா சீனிவாசன் நிகழ்வுக்கு தலைமை வகித்தாா். இதில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் கோவா்த்தனன் முன்னிலை வகித்தாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக அந்த அமைப்பச்சோ்ந்த லோகநாதன் பங்கேற்று குளம் தூா்வாரும் பணிகளை தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து தூா்வாரி சீரமைத்தல் மற்றும் குளக்கரையை பலப்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனா். குளக்கரையில் புங்கமரம், கருநாவல் மற்றும் மலை நெல்லி உள்ளிட்ட பலன் தரும் 100 மரக்கன்றுகள் நடப்பட்டு பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தூய்மை நம் கடமை, சுத்தமான குளக்கரை நம் பெருமை என்ற வாசகம் கூறி அந்த அமைப்பினா் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். இந்த நிகழ்வில் அண்ணாமலையின் வீ தித லீடா்ஸ் அமைப்பினா் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments