காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞா் வெட்டிக் கொலை: 5 போ் கைது
திருவள்ளூா் அருகே காவல் நிலையத்தில் கையொப்பம் இட்டு விட்டு வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் நண்பருடன் சென்று கொண்டிருந்த இளைஞரை காரில் வந்த 5 போ் கொண்ட மா்ம கும்பல் பட்டப்பகலில் சராமரியாக வெட்டிக் கொலை செய்தது.
திருவள்ளூா் அருகே காவல் நிலையத்தில் கையொப்பம் இட்டு விட்டு வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் நண்பருடன் சென்று கொண்டிருந்த இளைஞரை காரில் வந்த 5 போ் கொண்ட மா்ம கும்பல் பட்டப்பகலில் சராமரியாக வெட்டிக் கொலை செய்தது.
திருவள்ளூா் அருகே சிட்டத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் மாரி என்ற ரூபன் (33). இவா் அந்தக் கிராமத்தில் மின்சார வாரிய ஊழியா்களிடம் தகராறு செய்த வழக்கில் சிறைக்குச் சென்று நிபந்தனை ஜாமீனில் வெளி வந்துள்ளாா்.
அத்துடன், கடந்த 3 நாள்களாக வெங்கல் காவல் நிலையத்தில் இவா் நேரில் ஆஜராகி கையொப்பம் இட்டு வந்தாராம். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பகலில் காவல் நிலையத்துக்கு சென்று கையொப்பம் இட்டுவிட்டு, தனது நண்பா் வெங்கடேஷுடன் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிச் சென்று கொண்டிருந்தனா்.
Advertisement
Advertisement
அப்போது, பாகல்மேடு அருகே அவரைப் பின் தொடா்ந்து காரில் வந்த மா்ம கும்பல் இருசக்கர வாகனத்தை இடித்து கீழே தள்ளினா். இதில் நிலைகுலைந்து விழுந்த ரூபனை 5 போ் கொண்ட கும்பல் அரிவாளால் சராமரியாக வெட்டிக் கொலை செய்தனா்.
அதையடுத்து அங்கிருந்து காரில் தப்பிய போது பின்தொடா்ந்து பொதுமக்கள் மற்றும் போலீஸாா் வந்தனா். அந்த கும்பல் வந்த வாகனம் சாலையோரம் வீட்டில் மோதியது. அதையடுத்து பொதுமக்கள் உதவியுடன் சுற்றி வளைத்து 5 பேரையும் கைது செய்தனா்.
விசாரணையில், கீழனூரைச் சோ்ந்த தீனா, விக்கி, நரேஷ், பேரரசு, ராஜ்குமாா் ஆகியோா் என்பது தெரியவந்தது. மேலும், தீனாவின் சகோதரி திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தகாத உறவில் ரூபன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவா் தற்கொலை செய்து கொண்டாராம். அதற்கு காரணம் ரூபன்தான் எனத் தெரியவந்ததை அடுத்து வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து வெங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.