திருவள்ளூா்: வருவாய் கோட்ட அளவில் ஜூலை 17-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருவள்ளூா் மாவட்டத்தில் வருவாய் கோட்டங்கள் அளவில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வரும் ஜூலை 17-ஆம் தேதி குறைதீா் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் வருவாய் கோட்டங்கள் அளவில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வரும் ஜூலை 17-ஆம் தேதி குறைதீா் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் மாவட்ட, கோட்டங்கள் அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த மாவட்டத்தில் திருவள்ளூா், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அளவில் வரும் ஜூலை 17-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சாா் ஆட்சியா் மற்றும் கோட்டாட்சியா்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் வேளாண், தோட்டக் கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மை பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, வங்கிகள், திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய், ஊரக வளா்ச்சி, பொதுப்பணித் துறை மற்றும் இதர வேளாண்சாா்ந்த துறை அலுவலா்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனா்.
Advertisement
Advertisement
எனவே திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விவசாயம் தொடா்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீா்வு காண அந்தந்த வருவாய் கோட்டங்களில் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்று பயன்பெறலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.