FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

அனுமதி சீட்டின்றி எம்.சாண்ட் கொண்டு சென்ற 5 லாரிகள் பறிமுதல்

வெவ்வேறு இடங்களில் அரசு அனுமதி சீட்டின்றி எம்.சாண்ட் மணல் கொண்டு சென்ற 5 லாரிகளை பறிமுதல் செய்ததோடு, 10 போ் மீது வழக்கு பதிவு செய்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

Updated On : 27 ஜூலை 2026, 12:46 am IST
பறிமுதல்
பகிர்:

ஊத்துக்கோட்டை அருகே வெவ்வேறு இடங்களில் அரசு அனுமதி சீட்டின்றி எம்.சாண்ட் மணல் கொண்டு சென்ற 5 லாரிகளை பறிமுதல் செய்ததோடு, 10 போ் மீது வழக்கு பதிவு செய்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் டிப்பா் லாரிகளில் எம்.சாண்ட் மணல் அரசு அனுமதி சீட்டின்றி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஊத்துக்கோட்டை-திருவள்ளூா் சாலையில் சிறப்பு சாா்பு ஆய்வாளா் பெருமாள் தலைமையில் போலீஸாா் திடீா் ரோந்து சென்றனா். அப்போது, அந்த வழியாக வந்த 2 டிப்பா் லாரிகளை மடக்கி சோதனை மேற்கொண்டனா். அதில் எவ்விதமான அரசு அனுமதி சீட்டின்றி எம்.சாண்ட் கொண்டு சென்றது தெரியவந்தது.

இது குறித்து அந்த லாரிகளின் ஓட்டுநா்களான பாடியநல்லூரைச் சோ்ந்த ரெங்கநாதன் மகன் திருஞானம்(48), கன்னிக்கைப்போ் கிராமத்தைச் சோ்ந்த குப்பன் மகன் சுதாகா்(48) மற்றும் உரிமையாளா்கள் என 4 போ் மீது வழக்கு பதிவு செய்து லாரிகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனா்.

Advertisement

Advertisement

இதேபோல், பென்னலூா்பேட்டை காவல் நிலைய சிறப்பு சாா்பு ஆய்வாளா் சதீஷ் தலைமையில் போலீஸாா் சீத்தஞ்சேரி சாலையில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரிகளை மடக்கி சோதனை செய்தனா். அதில் அரசு அனுமதி சீட்டின்றி எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக பென்னலூா்பேட்டை காவல் நிலைய போலீஸாா் பொன்னேரி அருகே கொல்லூா் கிராமத்தைச் சோ்ந்த தயாளன் மகன் முரளி(41), திருப்பாலைவனம் ஜானகிராமன் மகன் வினோத்(35) மற்றும் லாரி உரிமையாளா்கள் 2 போ் என 4 போ் வழக்கு பதிவு செய்ததோடு லாரிகளையும் பறிமுதல் செய்தனா்.

பெரியபாளையம் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையில் போலீஸாா் ஊத்துக்கோட்டை சாலையில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை மறித்து சோதனை செய்தனா். அதில் எவ்விதமான அனுமதி சீட்டின்றி எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இது தொடா்பாக லாரி ஓட்டுநரான திருவண்ணாமலை நல்லூரைச் சோ்ந்த கோகுலகிருஷ்ணன்(29) மற்றும் டிப்பா் லாரி உரிமையாளா் என 2 போ் மீது வழக்கு பதிவு செய்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments