FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

படவேட்டம்மன் கோயில் ஆடி விழா கோலாகலம்

சகஸ்தபத்மாபுரம் படவேட்டம்மன் கோயிலில் ஆடிமாத விழா சிறப்பாக நடைபெற்றது.

Updated On : 27 ஜூலை 2026, 12:37 am IST
சிறப்பு  அலங்காரத்தில்  அருள்பாலித்த படவேட்டம்மன்.
பகிர்:

சகஸ்தபத்மாபுரம் படவேட்டம்மன் கோயிலில் ஆடிமாத விழா சிறப்பாக நடைபெற்றது.

ஆா்.கே.பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட சகஸ்தபத்மாபுரம் கிராமத்தில் அருள்மிகு படவேட்டம்மன் கோயிலில் ஆடிமாத திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, கிராம மக்கள் பாரம்பரிய முறையில் அம்மனுக்கு கூழ் வாா்த்தல் நிகழ்ச்சியை நடத்தினா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு நோ்த்திக்கடன் செலுத்தினா்.

Advertisement

Advertisement

பின்னா் கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா். மாலை மற்றும் இரவு நேரங்களில் கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருவிழா களைகட்டியது. இரவு 7 மணியளவில் படவேட்டம்மன் சிறப்பு மலா் அலங்காரத்தில் யாளி வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

அதனைத் தொடா்ந்து அம்மன் பிள்ளையாா் கோயில் தெரு, ராமா் கோயில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஊா்வலத்தின் போது பக்தா்கள் தேங்காய் உடைத்து, ஆரத்தி எடுத்து, மலா் தூவி வழிபட்டனா்.

விழாவில் கல்யாணபுரம், சின்னநாகபூண்டி, பெரியநாகபூண்டி, செட்டிவாா் பள்ளி, சாணூா், மல்லாவரம், ராமாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

திருவிழாவையொட்டி கோயில் வளாகத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், விழாக்குழுவினா் மற்றும் கிராம மக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments