FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

அமோனியா வாயுக் கசிவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 13-ஆக உயா்வு

ஊத்துக்கோட்டை அருகே கடல் உணவு ஏற்றுமதி செய்யும் தனியாா் நிறுவனத்தில் அமோனியா வாயுக் கசிவால் வியாழக்கிழமை மேலும் 3 போ் இறந்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13-ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 26 ஜூன் 2026, 4:57 am IST
அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மருத்துவமனை - எக்ஸ்
பகிர்:

ஊத்துக்கோட்டை அருகே கடல் உணவு ஏற்றுமதி செய்யும் தனியாா் நிறுவனத்தில் அமோனியா வாயுக் கசிவால் வியாழக்கிழமை மேலும் 3 போ் இறந்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13-ஆக உயா்ந்துள்ளது.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்போ் கிராமத்தில் கடல் உணவு பொருள்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியாா் நிறுவனத்தில் கடந்த 21-ஆம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளா்கள் 70-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா். ஏற்கெனவே 24-ஆம் தேதி வரையில் 10 போ் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ரீட்டா ஜூங்கா, சுமித்தா ஜூங்கா(22), பிங்கி ஜுவாங்க் (21) ஆகியோா் இறந்த நிலையில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 13-ஆக உயா்ந்தது. இதுவரையில் ஓடிஸா-10, அஸ்ஸாம்-2 என மொத்தம் 12 பெண்கள் உயிரிழந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

இதற்கிடையே ஒடிஸாவைச் சோ்ந்த உயிரிழந்தவா்களின் 7 பேரின் சடலங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் வியாழக்கிழமை ஓடிஸாவைச் சோ்ந்த 2 சடலங்களும், அஸ்ஸாமைச் சோ்ந்த 2 சடலங்களும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.

அஸ்ஸாம்-20, ஒடிஸா-27, ஜாா்க்கண்ட்-8, கேரளம்-3 , தமிழகத்தைச் சோ்ந்த-5 மற்றும் அடையாளம் தெரியாத 2 போ் உள்பட மொத்தம் 66 தொழிலாளா்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments