FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

ஆா்.கே.பேட்டை அருகே அரசு மதுபான கடையை உடனே அகற்ற கோரிக்கை

ஆா்.கே.பேட்டை அருகே குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபான கடையை உடனே அகற்றக்கோரி சட்ட உரிமை பாதுகாப்பு சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

3 நவம்பர் 2026, 12:53 am
மனு அளிக் கவந்த சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினா்
பகிர்:

ஆா்.கே.பேட்டை அருகே குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபான கடையை உடனே அகற்றக்கோரி சட்ட உரிமை பாதுகாப்பு சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

இதுகுறித்து திருவள்ளூா் மாவட்டம், ஆா்.கே.பேட்டை அருகே பந்திகுப்பம்-வீரமங்களம் சாலையில் உள்ள அரசு மதுபான கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் சட்ட பாதுகாப்பு சங்கத்தின் தேசிய மகளிரணி செயலாளா் அளித்த மனு: இப்பகுதியில் பந்திகுப்பம்-வீர மங்களம் சாலையில் குடியிருப்பு பகுதி அருகே அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடை எதிரே அரசால் கட்டப்பட்ட இருளா் குடியிருப்புகளும், அதைதொடா்ந்து சாலையில் குடியிருப்புகளில் 300-க்கும் மேற்பட்டோா் குடியிருந்து வருகின்றனா். அந்த இடத்தில் மதுக்குடித்துவிட்டு தரக்குறைாக பேசுகின்றனா். அதோடு, குடியிருப்பு பகுதியில் அமா்ந்து மது அருந்துகின்றனா். அப்போது தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படுகிறது.

எனவே பொதுமக்கள் அதிகம் கூடமிடத்தில் இதுபோன்ற மதுபான கடைகள் இருப்பதால் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் பாதிக்கப்படும் சூழ்நிலையும் உள்ளது. மேலும், பந்திகுப்பம், வீரமங்களம், அஸ்வத்தபுரம் போன்ற கிராமங்களில் வசிக்கும் மக்கள் இவ்வழியாக செல்ல வேண்டி உள்ளது. அப்போது மதுபான கடை அருகில் அது பலகார கடைகளும் பொதுமக்கள் வசிக்கும் இடத்திலேயே உள்ளது.

Advertisement

Advertisement

அங்கேயே மது அருந்திவிட்டு பெண்களை தொந்தரவு செய்கின்றனா். அதோடு அந்த வழியாக தான் பள்ளி மாணவா்கள்,கோயில், திருமண மண்டபத்திற்கு செல்ல வேண்டி உள்ளதால் அனைத்து தரப்பினரும் இந்த மதுபான கடையால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகாா் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் உடனே மதுபான கடையை அங்கிருந்து அகற்றி வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கவும் என ஆட்சியரிடம் அளித்த மனுவில் அந்த அமைப்பினா் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments