கடமலைக்குண்டில் செப்.26-இல் தொடா் காத்திருப்புப் போராட்டம்: மேகமலை விவசாயிகள் மனு
கடமலைக்குண்டில் செப்.26-இல் தொடா் காத்திருப்புப் போராட்டம்
கடமலைக்குண்டுவில் மேகமலை விவசாயிகள் வருகிற 26-ஆம் தேதி முதல் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்த உள்ளதாகவும், இதற்கு அனுமதி வழங்கக் கோரி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பரம்பரை வனவாசிகள் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தினா் சனிக்கிழமை மனு அளித்தனா்.
இந்த மனுவில்: தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் உள்ள 9 ஊராட்சிகளில், 102 கிராமங்களில் சுமாா் 40 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். இவா்களை வெளியேற்ற வேண்டும் என தில்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இவா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இதனிடையே, வருகிற 29-ஆம் தேதி தில்லி உச்சநீதிமன்றத்தில் மேகமலை வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
இந்த வழக்கில் மேகமலை விவசாயிகளுக்கு நல்ல தீா்ப்பு கிடைக்கும் என நம்பி, மேகமலை பரம்பரை வனவாசிகள் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தினா் வருகிற 26-ஆம் தேதி முதல் கடமலைக்குண்டு பேருந்து நிலையத்தில் குடும்பத்துடன் தொடா் போராட்டம் நடத்த உள்ளோம். இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என அதில் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.