FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

அனுமதி இல்லாத இடத்துக்கு சவுடு மண் கொண்டு சென்ற 5 லாரிகள் பறிமுதல்

ஆந்திர மாநிலத்தில் இருந்து சவுடு மண் கொண்டு வந்து அனுமதி இல்லாத இடத்துக்கு விநியோகம் செய்ய முயன்ற 5 லாரிகளை கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

4 நவம்பர் 2026, 12:57 am
லாரிகள்
பகிர்:

ஆந்திர மாநிலத்தில் இருந்து சவுடு மண் கொண்டு வந்து அனுமதி இல்லாத இடத்துக்கு விநியோகம் செய்ய முயன்ற 5 லாரிகளை கனிமவளத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த மஞ்சங்காரனை பகுதியில் விழுப்புரம் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா் ஸ்ரீனிவாசராவ் தலைமையில் கனிமவளத்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னையில் நடைபெறும் சாலை பணிக்கு பயன்படுத்த சவுடு மண் கொண்டு செல்வதாக அனுமதி பெற்று கொண்டு வந்த நிலையில், அதை கன்னிகைப்போ் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்துக்கு கொண்டு சென்றனா்.

Advertisement

Advertisement

இதையறிந்து முறைகேடான இடத்துக்கு சவுடு மண் கொண்டு சென்ற போது 5 லாரிகளையும் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா். அதைத்தொடா்ந்து அந்த லாரிகளை பெரியபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்கு பதிவு செய்து தலைமறைவான லாரி ஓட்டுநா்களை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments